மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது
இதுர்வ அதவலவத்த எஸ். ஓ. எஸ். சுனாமி கிராமத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் போது, தந்தை கத்தியால் குத்தியதில் மகன் உயிரிழந்துள்ளதாக கொஸ்கொட காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதுர்வ அதவலவத்தை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய கசுன் குமார என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
நீண்டநேர வாக்குவாதம் கொலையில் முடிந்தது
வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, தந்தை வீட்டின் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து மகனின் கழுத்தில் குத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த மகன் பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
அறுபத்தைந்து வயதுடைய தந்தை விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
