மகனின் தவறான நடத்தை - தாய் கடத்திக் கொலை செய்யப்பட்ட பரிதாபம்!
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய ஆயுர்வேத வீதியில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த பெண்ணின் மகனினுடைய தவறான நடத்தை கொலையில் முடிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாய் கடத்தப்பட்டு கொலை
சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண்ணை காரில் வந்த மூவர் கடத்திச் சென்றதாக அப்பெண்ணின் மகள் சூரியவெவ காவல்துறையில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சூரியவெவ வீரியகம பிரதேசத்தில் வசித்து வரும் 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் மகன் உணவகம் ஒன்றில் பணிபுரிபவர் என்றும், உணவகத்தின் உரிமையாளரின் மனைவியுடன் தவறான தொடர்பு இருந்ததாகவும், தற்போது இருவரும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் விளைவாக, உணவகத்தின் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்களால் குறித்த நபரின் தாய் கடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
