தமிழர் பகுதியில் தந்தையை கொலை செய்த மகனுக்கு விதிக்கப்பட்டது மரணதண்டனை
Trincomalee
Law and Order
By Bavan
திருகோணமலை- தோப்பூர், பாலத்தடிச்சேனை பகுதியில் தனது தந்தையைப் பொல்லால் அடித்துக் கொலை செய்த குற்றவாளியான மகனுக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று (22) தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, தனது தந்தையான கைலாசப்பிள்ளையைப் பொல்லால் அடித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
36 வயது மகனுக்கே மரணதண்டனை
தோப்பூர், பாலத்தடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய கைலாசப்பிள்ளை வினோதரன் என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நீதிமன்றத்தில் இறுதியாகத் தனது கருத்தைத் தெரிவித்த குற்றவாளி, மது போதையில் தனது தந்தையைக் கொலை செய்ததாகக் குறிப்பிட்டதுடன், தன்னை மன்னித்து, தண்டனையைக் குறைக்குமாறு நீதிபதியிடம் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி