காசா போர் எதிரொலி : தென்னாபிரிக்கா,சாட்நாடுகள் எடுத்த அதிரடி முடிவு
தென்னாபிரிக்கா மற்றும் சாட் நாடுகள் இரண்டும் இஸ்ரேலில் இருந்து தங்கள் இராஜதந்திரிகளை திரும்பப் பெற்றதாக அறிவித்துள்ளன.
தென்னாபிரிக்க வெளியுறவு அமைச்சர் நலேடி பாண்டோர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், தென்னாபிரிக்கா, இஸ்ரேலில் உள்ள தனது தூதரக அதிகாரிகளை திரும்ப அழைப்பதாக தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்கா அக்கறை
தென்னாபிரிக்கா "குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் தொடர்ந்து கொல்லப்படுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது" என்று பாண்டோர் மேலும் கூறினார்.
தென்னாபிரிக்காவிற்கு இஸ்ரேலில் ஒரு தூதுவர் இல்லை ஆனால் மூன்று இராஜதந்திரிகள் உள்ளனர். "சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் நடக்கும் இனப்படுகொலையை பொறுத்துக் கொள்ள முடியாது" என்று தென்னாபிரிக்க அதிபர் கும்புட்ஸோ நட்ஷாவேனியை மேற்கோள் காட்டி CNN செய்தி வெளியிட்டுள்ளது.
போர் நிறுத்தத்திற்கு அழைப்பு
கடந்த மார்ச் மாதம், தென்னாபிரிக்காவின் நாடாளுமன்றம் இஸ்ரேலுடனான தனது உறவை குறைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
இதேவேளை சாட் நாடும் நவம்பர் 4 அன்று சாட் இஸ்ரேலில் உள்ள தூதுவர்களை திரும்ப அழைத்ததாக CNN தெரிவித்துள்ளது.
"பல அப்பாவி பொதுமக்களின் மனித உயிர்களை சாட் கண்டிக்கிறது மற்றும் பாலஸ்தீன பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது" என்று அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.