தெற்காசியாவிலேயே அதிகூடிய மின்சார கட்டணம் கொண்ட நாடாக இலங்கை
தெற்காசிய நாடுகளிலேயே அதிகளவான மின்கட்டணத்தை இலங்கையர்கள் செலுத்துவதாக வெரித்தே ரீசர்ச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தெற்காசிய நாடுகள் சாதாரணமாக செலுத்தும் மின்கட்டணத்தின் 3 வீதமான தொகையை இலங்கயைில் உள்ளவர்கள் செலுத்துவதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார சபையின் நஷ்டம்
இலங்கையில் கடந்த ஆண்டில் மாத்திரம் மூன்று தடவைகள் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதாக வெரித்தே ரீசர்ச் ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மின்சார சபையின் நஷ்டத்தை ஈடு செய்வதற்காக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கட்டண திருத்தம்
இந்த நிலையில், பெப்ரவரி மாதத்தில் 4 வீதத்தால் மின் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ளது.
எனினும், தெற்காசியாவில் அதிக மின் கட்டணத்தை செலுத்தும் நாடு இலங்கை என்பதில் இந்த கட்டண திருத்தம் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |