சாலையில் ஓடிய ராட்சத நெருப்புக்கோழி! தென்கொரியாவில் சம்பவம்
Viral Video
South Korea
World
By Eunice Ruth
தென்கொரியாவின் சியோங்னாம் நகரில் நெருப்புக்கோழி ஒன்று சாலையில் ஓடியுள்ளது. இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தடோரி பகுதியில் சுற்றுச்சூழல் பூங்காவில் இருந்து தப்பிய நெருப்புக்கோழியொன்று சாலைகளில் ஓடியதோடு, சில வாகனங்கள் மீது மோதி உள்ளது.
ராட்சத நெருப்புக்கோழி
சாலைகளில் அங்கும், இங்குமாக ஓடிய ராட்சத நெருப்புக்கோழி திடீரென சுரங்க பாதை பகுதிக்குள் புகுந்தது.
இதனால் வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை நிறுத்தியுள்ளனர். சிலர் தங்களது தொலைபேசிகளில் அதனை காணொளியாக பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட போக்குவரத்து
இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக குறித்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
여러가지 생각이 든다. pic.twitter.com/2IGeqAwOoa
— EUN YOO 은유 (@eunyoo_park) March 26, 2024
இந்த நிலையில், தற்போது சாலையில் நெருப்புக்கோழி ஓடிய காணொளி சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்