YOUTUBE - இல் உள்ள பழைய காணொளிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு
யூடியூப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக "Super Resolution" என்ற புதிய AI அடிப்படையிலான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது 1080pக்கு கீழே ( 240p முதல் 720p வரை) பதிவேற்றப்பட்ட பழைய மற்றும் புதிய காணொளிகளை தானாகவே HD தரத்துக்கு (1080p) உயர்த்தும் அம்சத்தை கொண்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தை எதிர்காலத்தில் 4K வரை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
இதன் முக்கிய அம்சங்களாக தானியங்கி செயல்பாடாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த Upscaling தானாக நடக்கும் என்றும், ஆனால் Default-ஆக இயக்கப்பட்டிருக்கும்.

பழைய காணொளிகள் யூடியூப்பின் ஆரம்ப கால SD வீடியோக்கள் (பழைய கேமரா போன், VHS போன்றவை) பெரிய திரைகளில் நன்றாக தெரியும் வகையில் மேம்படுத்தப்படும்.
இந்த வசதி பெரிய திரைகளில் (TV) பார்க்கும் போது பழைய காணொளிகள் பிக்சல் போகாமல் தெளிவாக காட்சியளிக்க உதவும்.
மேலும், ஏற்கனவே சில Creator-கள் முன்பு AI மாற்றங்கள் பற்றி முறைப்பாடு கூறியதால், இம்முறை வெளிப்படையாக optout வசதி கொடுத்துள்ளனர் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
யூடியூப்பின் புதிய AI அப்ஸ்கேலிங் எப்படி வேலை செய்யும்?
குறைந்த தர வீடியோ (720p அல்லது கீழே)
↓
YouTube AI model (Google இன் Veo / Imagen அடிப்படையில்)
↓
புதிய பிக்சல்கள் உருவாக்கப்படும் (hallucination)
↓
1080p Premium அல்லது 4K தரத்தில் காட்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |