அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு : வெளியான அறிவிப்பு
அரச ஊழியர்களுக்கு சிறப்பு முற்பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார (Aloka Bandara) வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி, அரச ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் வரை சிறப்பு முற்பணம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கிக் கடன்கள்
சிறப்பு வங்கிக் கடன்கள் அல்லது முன்னர் பெறப்பட்ட சிறப்பு முற்பணங்களுக்கான தவணைகளை திருப்பிச் செலுத்தத் தவறிய எந்தவொரு அரச ஊழியருக்கும் இந்தக் கொடுப்பனவு பொருந்தாது என்று சுற்றறிக்கை தெளிவுபடுத்துகிறது.

இந்தக் கொடுப்பனவுகள் அடுத்த வருடம் ஜனவரி 1 முதல் பெப்ரவரி 28 வரை வழங்கப்படும் என கூறப்படுகின்றது.
இந்தத் தொகை பத்து சமமான மாதாந்த தவணைகளில் வசூலிக்கப்படும் என்றும், வருடாந்த வட்டி 8 சதவீதமாக வசூலிக்கப்படும் என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

