யாழ். மின்சார சபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு
Sri Lankan Tamils
Jaffna
By Independent Writer
யாழ். மின்சார சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை முதல் மறு அறிவித்தல் வரை “கருமபீடங்கள் எதுவும் இடம்பெறாது” என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது இலங்கை மின்சார சபையின் மாகாண கணக்காளரினால் விடுக்கப்பட்டுள்ளது.
கணக்காளரின் அறிக்கை
மேலும் தவிர்க்க முடியாத காரணத்தினால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அசௌகரியங்களுக்கு மனம் வருந்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தகவல் அறிய எமது ஊடகப் பிரிவானது வடக்கு மாகாண அலுவலகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்நிலையில் கடந்த காலங்களில் மின்சார சபை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான சிக்கல்கள் எழுந்த நிலையில் இது அறிவிக்கப்படாத பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையா என்ற கேள்விகளும் எழுப்பப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்