சித்திரை புதுவருடப்பிறப்பை முன்னிட்டு விசேட பேருந்து சேவை
By pavan
தமிழ் - சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, குறித்த காலப்பகுதியில் பகல் மற்றும் இரவு வேளைகளில் நெடுந்தூர பேருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆசன முற்பதிவு

மேலும், ஆசனங்களை முற்பதிவு செய்யக்கூடிய வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
5 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
1 வாரம் முன்
மரண அறிவித்தல்