பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து சேவை
transport
festival
bus service
special bus
By Kanna
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு தூரப்பிரதேசங்களுக்கான விசேட பேருந்து சேவை, இன்று ஆரம்பிக்கப்படுவதாக போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
விசேட பேருந்துகள் சேவையில் ஈடுபட உள்ளதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேலதிகமாக 1,000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இருப்பினும், போதுமான அளவு டீசல் கிடைக்காவிட்டால், எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில், தூரப்பிரதேசங்களுக்கு சேவையில், தனியார் பேருந்துகள் ஈடுபட மாட்டாதென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி