சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் விசேட விடுமுறை
Sri Lanka Economic Crisis
Ministry of Health Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Vanan
விசேட விடுமுறை
சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் வார நாட்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.
விடுமுறைக்கான ஏதுநிலை
சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் முன்னுரிமை அளிக்கும் வகையில் வழங்கப்பட்ட அட்டை பயனற்றுப் போயுள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த அட்டையைப் பயன்படுத்தி எரிபொருள் நிரப்ப முயற்சித்த சமயத்தில் சில மருத்துவர்கள் அச்சுறுத்தப்பட்டிருந்ததுடன், அவர்கள் மீது தாக்குதல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்