தம்பிலுவில் இந்து மயானத்தை தோண்டும் சி.ஐ.டி! இனிய பாரதியை இலக்கு வைத்து அதிரடி விசாரணை

CID - Sri Lanka Police Sri Lankan Tamils Karuna Amman Pillayan
By Dhilak Jul 31, 2025 02:23 PM GMT
Report

இனியபாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன 18 வயது மாணவன் பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் எதிதினியாக கொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் சிஐடியினர் தோண்டுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நடவடிக்கையானது, திருக்கோவில் காவல்துறை பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில் இன்று வியாழக்கிழமை (31) சிஜடியினரால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம்! நீதியமைச்சு வழங்கியுள்ள உறுதிமொழி

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம்! நீதியமைச்சு வழங்கியுள்ள உறுதிமொழி


கடத்தப்பட்டு படுகொலை 

கருணா கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து சிஜடியினர் கைது செய்தனர்.

தம்பிலுவில் இந்து மயானத்தை தோண்டும் சி.ஐ.டி! இனிய பாரதியை இலக்கு வைத்து அதிரடி விசாரணை | Special Inspection At Thambiluvil Public Cemetery

இவர்களுடன் இனிய பாரதியின் சகாக்களான முன்னாள் சாரதி செந்தூரன், திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன், வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலிகிருஷ்ணன் சபாபதி மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஸ்கண்ணா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டு ஜுலையில் திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவன் பார்தீபன், 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த கிழக்கு பல்கலைக்ழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், 2010- ஜனவரி 26ம் திகதி ஊடகவியலாளர் பிரதீப் எக்நல கொட ஆகியோர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவாக மாறிய அறுகம் விரிகுடா: சுற்றுலா பயணியின் பகீர் தகவல்!

இஸ்ரேலின் டெல் அவிவாக மாறிய அறுகம் விரிகுடா: சுற்றுலா பயணியின் பகீர் தகவல்!


மனித எச்சங்கள்

இதனையடுத்து சிஜடி யினர் கைது செய்யப்பட்டவர்களை குறித்த மயானத்துக்கு கடந்த இரு தினங்களாக அழைத்துச் சென்று புதைக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்தினர். 

தம்பிலுவில் இந்து மயானத்தை தோண்டும் சி.ஐ.டி! இனிய பாரதியை இலக்கு வைத்து அதிரடி விசாரணை | Special Inspection At Thambiluvil Public Cemetery

இதற்கமைய குறித்த மயான இடத்தை தோண்டி சோதனை செய்வதற்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் சிஜடி யினர் அனுமதி கோரியதையடுத்து நீதவான் ஏ.எல்.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஸ்கண்ணா அடையானம் காண்பிக்கும் இடத்தை பைக்கோ இயந்திரம் கொண்டு பிற்பல் 2.00 மணிக்கு தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த பகுதியில் இதுவரையில் எதுவித மனித எச்சங்களும் கடைக்கபெறவில்லை என்றே கூறப்படுகிறது.

தேசியத்தலைவருக்கு நினைவேந்தல் சதியா? ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய மூலப்புள்ளிகள்

தேசியத்தலைவருக்கு நினைவேந்தல் சதியா? ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய மூலப்புள்ளிகள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026