திருக்கோவில் பகுதியில் விசேட சோதனை! துப்பாக்கி - கைக்குண்டுகள் மீட்பு
அம்பாறை , கஞ்சிகுடிச்சாறு மற்றும் காஞ்சிரங்குடா ஆகிய பகுதிகளில் மோட்டார் குண்டொன்றும், ரி-56 ரக துப்பாக்கிப் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாகத் திருக்கோவில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கஞ்சிகுடிச்சாறு பகுதியில் உள்ள குளக்கரையை அண்மித்த இடத்தை அரச அபிவிருத்திப் பணியாளர்கள் அல்லது பொதுமக்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உடனடியாகத் திருக்கோவில் காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையும் பாதுகாப்புத் தரப்பினரும் மேலதிக விசாரணைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
இரகசியத் தகவல்
இந்நிலையில் , மற்றொரு சம்பவமாக, விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் திருக்கோவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராம அலுவலர் பிரிவில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அங்குள்ள அரசாங்க நெல் களஞ்சியசாலைக்கு அருகிலுள்ள பாழடைந்த கிணற்றுக்குள் கைவிடப்பட்டிருந்த நிலையில் ரி-56 ரகத் துப்பாக்கியின் பாகங்கள் இதன்போது மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |