சிகிச்சை பெற்று வரும் மகிந்த சிறையிலுள்ள நாமலுக்கு சிறப்புக் கடிதம்!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு ஒரு சிறப்புக் கடிதம் அனுப்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மகிந்தவின் அறிவுறுத்தலின் பேரில் அவரது செயலாளர்களில் ஒருவரால் இந்த கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கடிதத்தில் அடங்கியுள்ள அனைத்து தகவல்களும் இன்னும் ஊடகங்களுக்கு வெளியிடப்படாத நிலையில், முன்னாள் ஜனாதிபதி தனது மகனிடம் நீதித்துறையின் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
நாமலை சிறை செல்ல கூறிய மகிந்த
2010-ல் நாமல் ராஜபக்ச அரசியலில் நுழைந்தபோது, அவர் சிறை செல்லவும், எந்தவொரு இன்னல்களையும் எதிர்கொள்ளவும் தயாராக இருந்தால் மட்டுமே அவரை அவ்வாறு செய்ய அனுமதித்ததாக நினைவு கூர்ந்த முன்னாள் ஜனாதிபதி, தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில் தானும் ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட நேர்ந்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சனகா நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தபோது, அது தொடர்பான கடிதத்தை நாமல் ராஜபக்சவிடம் நேரில் வழங்கியதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |