வெளிநாடு ஒன்றிலுள்ள இலங்கையருக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்(விபரம் உள்ளே)
Sri Lankan Peoples
Abu Dhabi
Tourist Visa
By Sumithiran
ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம், சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்துள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
சுற்றுலா விசாவில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வீசா ரத்து செய்யப்பட்டுள்ள அல்லது தாயகம் திரும்ப முடியாத நிலையில் உள்ள இலங்கையர்கள் உதவிக்காக தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு இலங்கை தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில்

+97126316444 / +97126346481 என்ற அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்கள் மூலம் அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தங்கள் தகவல்களைப் பதிவு செய்யுமாறு, சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை தூதரகம் வலியுறுத்தியது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தமது விவரங்களை பதிவு செய்யுமாறு இலங்கைத் தூதரகம் சம்பந்தப்பட்ட இலங்கையர்களை கேட்டுக்கொள்கிறது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி