இலங்கையில் உள்ள மாலைதீவு பிரஜைகளுக்கு வெளியான அறிவிப்பு
இலங்கையின் சுற்றுலா விசாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பை மாலைதீவு(maldive) வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
தற்போதைய நடைமுறையின் படி மாலைதீவு பிரஜைகள் இலங்கைக்கு வந்த பின்னர் 30 நாட்கள் சுற்றுலா விசா(visa)வை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என மாலைதீவு வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மாலைதீவு பிரஜைகள் 30 நாட்களுக்கு மேல் தங்குவதற்கு, https://www.srilankaevisa.lk/ ஐப் பார்வையிடுவதன் மூலம் 6 மாத இலவச விசாவிற்கு ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் இந்த விசாவிற்கு நிர்வாகக் கட்டணம் வசூலிக்கப்படும்.
விசா நீடிப்பு தேவைப்படுபவர்கள்
ஏற்கனவே இலங்கையில் இருக்கும் மாலைதீவு பிரஜைகள் விசா நீடிப்பு தேவைப்படுபவர்கள் கொழும்பில் உள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ள முடியும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலா விசாக்களில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விளக்கம் தேடுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாலைதீவு சுற்றுலாப் பயணிகள்
இலங்கையில் புதிய இ-விசா முறையின் அறிவிப்புடன், மாலைதீவு சுற்றுலாப் பயணிகள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்பதை உறுதி செய்ய, இலங்கை பிரதிநிதிகளுடன் மாலைதீவு வெளியுறவு அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அத்துடன், இலங்கைக்கு வரவிருக்கும் மாலைதீவு குடியிருப்பாளர்கள் மேலதிக உதவிகள் தேவைப்படின் அமைச்சுக்கு தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |