யாழ். மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவித்தல்
Jaffna
Sri Lanka Economic Crisis
Sri Lanka Fuel Crisis
By Vanan
யாழ். மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவை பெறுநர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் பெற்றுக்கொள்வதில் உள்ள வரையறைகளால் போக்குவரத்து துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினை வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் திறக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை யாழ். மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அந்தவகையில், யாழ். மாவட்ட போக்குவரத்து திணைக்களமும் சேவை பெறுநர்களின் தேவை கருதி திங்கள், செவ்வாய், மற்றும் புதன் ஆகிய கிழமைகளில் மட்டும் திறந்திருக்கும் என்பதுடன், குறிப்பிட்ட நாட்களில் சேவை பெறுநர்கள் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

