ஆசனப்பட்டி சட்டம் : பழைய வாகனங்களுக்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் விசேட சலுகை
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று (20) முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த ஆசனப்பட்டி (Seat Belt) அணியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.
அதன்படி, உற்பத்தியாளரால் பின்வரிசை நடுவிலுள்ள இருக்கைக்கோ அல்லது ஏனைய பின் இருக்கைகளுக்கோ ஆசனப்பட்டிகள் பொருத்தப்படாத வாகனங்கள், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது பின்பற்ற வேண்டிய சில விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படவுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்
இந்தச் சலுகை நேற்று (20) முதல் ஜூன் மாதம் 19ஆம் திகதி வரை மூன்று மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2011ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மோட்டார் வாகன (அதிவேக நெடுஞ்சாலை) ஒழுங்குவிதிகள் திருத்தப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |