யாழில் காற்று மாசுபாடு : முன்னெடுக்கப்படவுள்ள விசேட திட்டம்

Jaffna Sri Lanka Air Pollution
By Raghav Mar 06, 2025 08:16 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna)  உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை வகுக்க சுற்றாடல் அமைச்சர் மற்றும் பிரதிவாதிகளுக்கு உத்தரவிடக் கோரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமா சுகி நடராஜாவினால் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த மனு இன்று (06.03.2025) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி முகமது லபார் தாஹிர் மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

மூவாயிரத்திற்கு மேற்பட்ட புதிய நியமனங்கள்: அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

மூவாயிரத்திற்கு மேற்பட்ட புதிய நியமனங்கள்: அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

யாழில் காற்றின் தரம் 

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

யாழில் காற்று மாசுபாடு : முன்னெடுக்கப்படவுள்ள விசேட திட்டம் | Special Project To Reduce Air Pollution In Jaffna

யாழ்ப்பாணக் குடாநாட்டில் காற்றின் தரம் குறித்து ஒரு மாத காலத்திற்கு ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது. 

அந்த உத்தரவின்படி, தொடர்புடைய கணக்கெடுப்பு அறிக்கை சட்டமா அதிபர் மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

இந்த ஆய்வறிக்கையை ஆய்வு செய்தபோது, ​​யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள காற்றில் நிலையான அளவை விட அதிகமான தீங்கு விளைவிக்கும் கூறுகள் இருப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளதாக மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே, நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்தார். 

ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீள திறக்குமாறு கோரிக்கை

ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையை மீள திறக்குமாறு கோரிக்கை

மேன்முறையீட்டு நீதிமன்றம்

யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். 

யாழில் காற்று மாசுபாடு : முன்னெடுக்கப்படவுள்ள விசேட திட்டம் | Special Project To Reduce Air Pollution In Jaffna

இதற்காக பெரும் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்றும், இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து நிதியைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்காலத்தில் அறிக்கை வழங்குமாறு நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டது. 

அதற்கமைய, குறித்த மனுவை ஜூலை 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்தது. 

தப்பியோடிய நூற்றுக்கணக்கான முப்படை வீரர்கள் சிக்கினர் : அமைச்சர் அறிவிப்பு

தப்பியோடிய நூற்றுக்கணக்கான முப்படை வீரர்கள் சிக்கினர் : அமைச்சர் அறிவிப்பு

தீங்கு விளைவிக்கும் கூறுகள் 

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல்வேறு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் வெளியேற்றப்படுவதாலும், இந்தியா போன்ற அண்டை நாடுகளிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கூறுகள் காரணமாகவும், யாழ்ப்பாணக் குடாநாட்டில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டார். 

யாழில் காற்று மாசுபாடு : முன்னெடுக்கப்படவுள்ள விசேட திட்டம் | Special Project To Reduce Air Pollution In Jaffna

இது தொடர்பாக பொறுப்பான அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், காற்றின் தரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான எந்த நடவடிக்கையும் செயல்படுத்தப்படவில்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எனவே, யாழ்ப்பாணக் குடாநாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு திட்டத்தை வகுக்குமாறும் மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியோர் : வெளியான தகவல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியோர் : வெளியான தகவல்

தனியார் பேருந்துகளுக்கான வீதி அனுமதி பத்திரம் : கட்டாயமாக்கப்படும் நடைமுறை

தனியார் பேருந்துகளுக்கான வீதி அனுமதி பத்திரம் : கட்டாயமாக்கப்படும் நடைமுறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023