ஐரோப்பிய சுற்றுலா பயணிகளை ஈர்க்க இலங்கையின் புதிய திட்டம்
இந்த ஆண்டு சுற்றுலா இலக்குகளை அடைவதற்காக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் ஒரு சிறப்பு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
சுற்றுலா பயணிகள் அதிகம் வராத காலங்களில் அவர்களை நாட்டிற்கு ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளை இலக்காகக் கொண்டு விளம்பரத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆணையத்தின் தவிசாளர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஸ்பெயின் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து கோடை சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் நாட்டிற்கு வருவதால், விளம்பர நடவடிக்கைகளுக்காக அந்த பகுதிகளை இலக்காகக் கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
நோக்கம்
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியாவில் முதலில் ஒரு சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது என்றும், அது டெல்லி, மும்பை மற்றும் சென்னை நகரங்களில் செயல்படுத்தப்பட்டது என்றும் தவிசாளர் குறிப்பட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைப் பன்முகப்படுத்தி, அதிக மதிப்புமிக்க சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குக் கொண்டுவருவதே இதன் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |