மலையக மக்களுக்கு வடக்கில் காணி...! அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு நிலமற்ற நிலையில் தவிக்கும் மலையக மக்களுக்கு, வடக்கில் காணிகளை வழங்கப் போவதாக மானிடம் பூமி தான இயக்கம் அறிவித்துள்ளதுடன், இதற்கான வீடமைப்பு உதவிகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அவ்வியக்கத்தின் தலைவி கு.சோதிநாயகி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தொடர் மண்சரிவு மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நிலமற்ற மலையக மக்களுக்காக, வடக்கில் தமது இயக்கம் ஊடாகப் பலர் காணிகளை வழங்க முன்வந்துள்ளனர்.
கையளிப்பு நடைமுறை
இவ்வாண்டு அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாரிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், இவர்களுக்கான நிதி உதவியை விரைவாக விடுவிக்க வேண்டும்.
காணி கையேற்பு மற்றும் கையளிப்பு நடைமுறைகளை அதிகாரிகள் மூலம் துரிதப்படுத்த விசேட பணிப்புரைகளை வழங்க வேண்டும்.

நாடு தழுவிய ரீதியில் இயற்கை அனர்த்தங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த விசேட செயற்றிட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதியை வரவேற்றுள்ள அவ்வியக்கம், நிலமற்ற மலையக மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் இதனை ஒரு பொங்கல் பரிசாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |