ட்ரம்பிற்கு கொலை மிரட்டல் விடுத்த ஈரான் அரசு ஊடகம்: புகைப்படத்தை வெளியிட்டு பகிரங்க எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஈரானின் அரச ஊடகமொன்று கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் 3500 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இருப்பதாக ஈரான் ஆட்சியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இராணுவ நடவடிக்கை
அதற்கேற்றாற் போலவே, ட்ரம்பும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றார்.

இந்தநிலையில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் இராணுவ நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஈரானை எச்சரித்த ட்ரம்ப், அரசு நிறுவனங்களை கைப்பற்றுமாறு போராட்டக்காரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்தோடு, தேவையான உதவிகள் உங்களை தேடி வரும் எனவும் போராட்டக்காரர்களுக்கு ட்ரம்ப் தைரியம் கொடுத்துள்ளார்.
பெரும் பதற்றம்
இதுமட்டுமன்றி ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக அவர் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஈரானின் அரச ஊடகமொன்று ட்ரம்புக்கு நேரடி கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு பிரசாரக் கூட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ட்ரம்ப் காயமடைந்த புகைப்படத்தை வெளியிட்ட குறித்த அரச ஊடகம், இந்த முறை இலக்கை தோட்டாக்கள் தவற விடாது என தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தற்போது சர்வதேச ரீதியில் பெரும் பதற்றைத்தை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |