மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை : வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
மத்திய மாகாணத்தில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் (01.11.2024) விடுமுறை வழங்குவதற்கு மத்திய மாகாண கல்வி திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நாளைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளமையினால், மறுநாள் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வலயக் கல்வி பணிப்பாளர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்பு
அதன்படி, குறித்த நாளுக்கான கல்வி செயற்பாடுகளை எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், நாளை மறுதினம் மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாண கல்வி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாண (Uva Province) தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01.11.2024) ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (31.10.2024) கொண்டாடப்படவுள்ள நிலையில், தீபாவளி தினத்துக்கு மறுநாள் தமிழ் மாணவர்கள் பாடசாலைக்கு வருவதில் சிரமம் என்பதால் இந்த தீர்மானிம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு விடுமுறை
மேலும், குறித்த நாளுக்கான கல்வி செயற்பாடுகளை எதிர்வரும் நவம்பர் (09.11.2024) ஆம் திகதி முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்வி அமைச்சு (Ministry of Education) வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |