வெசாக் தினத்தில் சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிபர் அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
இந்த விசேட அரச மன்னிப்பின் பிரகாரம், வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகளும், மஹர சிறைச்சாலையில் இருந்து 37 கைதிகளும் என மொத்தம் 278 கைதிகள் 23.05.2024 அன்று விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இதன்படி, பின்வரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
விசேட சலுகை
“23.05.2024 வரை சிறையில் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் ஒவ்வொரு ஆண்டும் அல்லது அதன் ஒரு பகுதிக்கும் ஒரு வாரம் (01 வாரம்) நிவாரணம் வழங்குதல்.
அபராதம் செலுத்தாத காரணத்தால், 23.05.2024க்குள் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் மீதமுள்ள தண்டனைத் தொகை ரத்து செய்யப்படும்“ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேட நிகழ்வு
இதேவேளை நாளையும் நாளை மறுதினமும் (23 மற்றும் 24ஆம் திகதி) சிறைக் கைதிகளுக்கு விசேட நிகழ்வாக பார்வையாளர்கள் காண்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
அந்த நாட்களில் கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவு, இனிப்புகள் மற்றும் சுகாதார பொருட்கள் மட்டுமே ஒரு கைதிக்கு போதுமானதாக வழங்கப்படும் என்று திஸாநாயக்க கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |