கோட்டாபய வெளியிட்ட விசேட அறிவிப்பு
நெருக்கடியான நிலைமைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு
தற்போதைய நெருக்கடியான நிலைமைக்கு ஓரிரு நாட்களில் தீர்வு கிட்டும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை விடுத்து இதனை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எரிவாயு மற்றும் எரிபொருள் இருப்புக்கள் ஜூலை 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்குள் இலங்கையை வந்தடையும்.
தவறான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதுடன், அடுத்த சில வாரங்களுக்குள் நிதித் திட்டம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெருக்கடியைச் சமாளிக்கவும் தீர்க்கவும் பல திட்டமிடல் மற்றும் கடின உழைப்புக்குப் பிறகு, முடிவுகள் இப்போது தெளிவாகத் தெரிகிறது.
ஆகையினால், எதிர்க்கட்சியினரால் பரப்பப்படும் தவறான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.