பிரான்ஸ் ஈரான் இடையே விசேட பேச்சுவார்த்தை
பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பரோட், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொலைபேசியில் உரையாடி நோயல் பரோட் மோதலைத் தணிக்க வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
"ஈரானிய தாக்குதல்களை பரோட் கண்டித்ததாகவும், மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மை, பதற்றத்தைக் குறைத்தல் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு இணங்க, கோரும் இராஜதந்திர உரையாடலை மீண்டும் தொடங்குவதற்கான பிரான்ஸின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாகவும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டினரின் பாதுகாப்பு
ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டினரின் பாதுகாப்பு குறித்தும் பரோட் கவலை தெரிவித்ததாகவும், அவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளார்.

உளவு பார்த்ததாக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டவர்களான ஜாக் பாரிஸ் மற்றும் செசிலி கோஹ்லர் ஆகியோரை ஈரான் நவம்பர் மாதம் விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |