விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவர் கைது: வெளியான காரணம்
ரத்கம (Rathgama) பிரதேசத்தில் திருடப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று தொடர்பில் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருடப்பட்ட 11 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டியொன்று முகப்புத்தகம் ஊடாக 175000 ரூபாவிற்கு விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிளுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரத்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16 ஆம் திகதி ரத்கம காலி வீதியில் கம்மெத்தகொட பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றை அடையாளந்தெரியாத கும்பலொன்று திருடிச் சென்றுள்ளது.
விசாரணை
இந்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர், விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் ஒருவரை நேற்று (17) குறித்த முச்சக்கரவண்டியுடன் கைது செய்துள்ளனர்.
அதன் பின்னர் கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முகப்புத்தகத்தின் ஊடாக வெளியிடப்பட்ட விளம்பரத்தை பின்பற்றி முச்சக்கரவண்டியை கொள்வனவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |