யாழில் நள்ளிரவில் விசேட அதிரடி படையினரின் அதிரடி நடவடிக்கை..!
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோத மணல் மண் ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் வாகனம் ஒன்றினையும், மேலும் ஒரு வெறுமைாக சென்ற சென்ற டிப்பர் வாகனத்தையும் நேற்றிரவு(24) சிறப்பு அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் இரண்டு டிப்பர்களின் சாரதிகளையும் கைது செய்து பருத்தித்துறை காவல் நிலையத்தில் உரிய சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.
பத்து வருடங்களுக்கு மேலாக வடமராட்சி கிழக்கு மாமுனை செம்பியன்பற்று மற்றும் பகுதிகளில் சட்டவிரோத மணல் மண் அகழ்ந்து டிப்பர் வாகனத்தில் கொண்டுசென்று விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரது டிப்பர் வாகனமே சிறப்பு அதிரடிப் படையினாரால் கைப்பற்றப்பட்டு பருத்தித்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளது.
உரிய சட்ட நடவடிக்கை
இதில் ஒரு டிப்பர் வாகனம் உரிய ஆவணங்களுடன் காணப்பட்டமையால் அவ் டிப்பர் வாகனமும் அதன் சாரதியும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய டிப்பர் மற்றும் அதன் சாரதி பருத்தித்துறை காவல் நிலையத்தில் உரிய சட்ட நடவடிக்கைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |