சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு: காவல்துறை எடுத்த நடவடிக்கை
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கான அடிப்படை நடவடிக்கையாக 1997 என்ற விசேட குறுகிய தொலைபேசி இலக்கம் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் தமது பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை தொடர்பில் இந்த இலக்கத்தின் ஊடாக காவல்துறைக்கு அறிவிக்க முடியும் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பருவம்
மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள இராணுவ நிலைமையை கருத்தில் கொண்டு, இந்த நாட்டுக்குக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டும் என காவல்துறை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வரவிருக்கும் சுற்றுலாப் பருவத்தில் இலங்கைக்கு வருகை தருமாறு உலகெங்கிலும் உள்ள பயணிகளை இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.
பாதுகாப்பு
அத்தோடு, சுற்றுலாப் பயணிககள் தங்கியிருக்கும் காலம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரநிலைகள் நிலைநிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் பயணங்களைத் திட்டமிடுபவர்களுக்கு மன அமைதியை வழங்குவதாக பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |