விசேட அதிரடிப்படையினருக்கு துப்பாக்கிச் சூட்டு பயிற்சி : காவல்துறை மா அதிபரின் அதிரடி உத்தரவு
நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படு்த்தும் நோக்கில் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த விசேட அதிரடிப்படையினருக்கு விசேட பயிற்சி வழங்கப்பட உள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்கு விஜயம் செய்திருந்த போது அவர் நேற்றையதினம்(16) இதனை குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு பயிற்சி
இதன்படி தப்பிச் செல்லும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்த பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 100 பேருக்கு இந்த விசேட துப்பாக்கிச் சூட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
எதிர்வரும் மூன்று மாத காலப் பகுதியில் இந்த நாட்டிலிருந்து போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் இல்லாதொழிக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |