கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்
இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒத்திகைகளை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
78 ஆவது சுதந்திர தின விழா ‘இலங்கையை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுதந்திர தின பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகை நடவடிக்கைகள் இன்று (30) முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா குறிப்பிட்டுள்ளார்.
விசேட போக்குவரத்து திட்டம்
இதனால் 78 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இன்று (30), நாளை (31), மற்றும் 02 ஆம் திகதி ஆகிய நாட்களில் காலை 07:45 மணி முதல் மதியம் 1:30 மணி வரையும் எதிர்வரும் 01ஆம் திகதி காலை 05:00 மணி முதல் 01:30 மணி வரையும் சுதந்திர தின நாளில் காலை 05:00 மணி முதல் கொண்டாட்டங்கள் முடியும் வரையும் போக்குவரத்து பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
