நாளை முதல் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்
Sri Lanka Police
Colombo
Galle
Sri Lanka
Transport Fares In Sri Lanka
By Shadhu Shanker
புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதனை இன்று(30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் தெரிவித்தார்.
கொழும்பு நகரில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசேட போக்குவரத்துத் திட்டம்
குறித்த திட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை (31) மாலை 5 மணி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய காலி வீதியின் ஒரு பகுதி, அதிபர் மாவத்தை, இலங்கை வங்கி மாவத்தை, லோட்டஸ் வீதி மற்றும் நவம் மாவத்தை உள்ளிட்ட பல வீதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி