இந்த விலங்குகளை கனவில் கண்டால் என்ன பலன் ஏற்படும் தெரியுமா?
பொதுவாக விலங்குகள் கனவில் வருவது உங்களுக்கு வரப் போகும் ஆபத்துக்கள், பிரச்சனைகள் குறித்து எச்சரிப்பதற்காக என சொல்லப்படுகிறது.
அதே சமயம் சில பறவைகள், பூச்சிகளை கனவில் கண்டால் அவை நன்மையை, மகிழ்ச்சியை, செல்வம் வருவதற்கான வழியை உணர்த்தும் அறிகுறிகளாகும்.
கனவுகள் என்பது ஆழ்மனதின் பிரதிபலிப்பு என சொல்லப்படுகிறது. ஒருவர் உறக்கத்தில் இருக்கும் போது அவரை எதிர்காலம், கடந்த காலம், நிகழ்காலம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்து ஒரு கருவியாக கனவுகள் உள்ளன.
கனவில் விலங்குகள் வந்தால்
வெற்றி - தோல்வி, அழுகை - சிரிப்பு, பிரியமானவர்கள் - வேண்டாதவர்கள், உணவு, காடு, விலங்குகள், இடங்கள் உள்ளிட்ட எது வேண்டுமானாலும் கனவில் வரும். இவற்றிற்கு வரையறை என்பது கிடையாது. பொதுவாக கனவுகள் ஏதோ ஒன்றை நமக்கு உணர்த்துவதற்காக அல்லது எச்சரிப்பதற்காக தான் வருகின்றன என சொல்லப்படுகிறது
பொதுவாக கனவில் விலங்குகள் வந்தால் நம்முடைய ஆழ்மனதில் மறைந்திருக்கும் உணர்வுகள், பயம், ஆசை ஆகியவற்றை வெளிப்படுத்தும் உணர்வு என சொல்லப்படுகிறது.
வில ங்குகள் கனவில் வருகிறது என்றாலே பொதுவாக ஒரு விஷயத்தை உங்களுக்கு உணர்த்த நினைக்கிறது என்று அர்த்தம். அதே சமயம் ஒரு குறிப்பிட்ட விலங்கு உங்களின் கனவில் வந்தால் அதன் காரணத்தை நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
எறும்புகள் | எறும்புகளை கனவில் கண்டால் நீங்கள் கடின முயற்சி எடுத்து உழைக்கும் விஷயத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று அர்த்தம். உங்கள் உழைப்பின் முழு பலனையும் நீங்கள் விரைவில் அடைய போகிறீர்கள் என்ரு அர்த்தம். அலுவலகம், வீடு அல்லது தொழில் செய்யும் இடம் அல்லது உங்களின் தவிப்பட்ட வாழ்க்கையில் உங்களை போன்ற ஒரு கடின உழைப்பாளியுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, நீங்கள் தலைமை பதவிக்கு உயர்வீர்கள் என்று அர்த்தம். அதே சமயம் எறும்புகள் வீட்டிற்குள் வருவது போல் கனவு கண்டால், உங்கள் வீட்டில் விரைவில் அமைதியை பாதிக்கும் விஷயம் ஒன்று நடைபெற போவதாக அர்த்தம். |
காளை மாடு | காளை மாட்டினை கனவில் கண்டால் உங்களின் அழகு, வசீகரம், பலம் அதிகரிக்க போகிறது என்று அர்த்தம். உங்களின் செல்வ வளம் உயர போகிறது என்பதற்கான அறிகுறியாகும். ஆண்களின் கனவில் காளை மாடு வந்தால் உங்கள் வாழ்வில் காதல் மலர போகிறது என்று அர்த்தம். அதுவே பெண்களின் கனவில் காளை மாடு வந்தால் பெரும் மனக்கஷ்டம், மன அழுத்தத்தை சந்திக்க போவதாக அர்த்தம். |
வெளவ்வால் | வெளவ்வாலை கனவில் கண்டால் அது பயத்தை குறிப்பதாகும். வெளவ்வால் உங்களை தாக்குவதாக கனவு கண்டால் நீங்கள் பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். வெளவ்வால் குகையில் ஓய்வு எடுப்பதை கனவில் கண்டால் உங்களின் பயம் அர்த்தமற்றது என்று பொருள். அதனால் உங்களுக்கு கெடுதலோ, பாதிப்போ ஏதும் ஏற்படாது என்று அர்த்தமாகும். |
வண்டுகள் | வண்டுகளை கனவில் கண்டாலோ அல்லது 6 முதல் 8 கால்களை கொண்ட பூச்சிகளை கனவில் கண்டாலோ பல மடங்கு அதிகமான பிரச்சனைகள் உங்கள் வாழ்வில் வரப் போகிறது என்று அர்த்தம். நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்து விடுவீர்கள் என நம்பிக்கையுடன் இருங்கள். |
தேனீக்கள் | தேனீக்கள் உங்கள் கனவில் வந்தால் உங்கள் வீட்டை தேடி சில மகிழ்ச்சியான விஷயங்கள் வரப் போகிறது என்று அர்த்தம். அதிர்ஷ்டம், நல்ல செய்தி உங்களைத் தேடி வரப் போகிறது என்று அர்த்தம். |
பொறுப்பு துறப்பு : இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( IBC TAMIL தளம் இதற்கு பொறுப்பேற்காது ).
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
