தமிழர் பகுதியில் 16 சிறுவர்களிடம் பாலியல் சேட்டை: சந்தேக நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கிளிநொச்சியில் (Kilinochchi) 16 சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய விளையாட்டு பயிற்றுநருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் இன்று (14.04.2025) நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியல் உத்தரவிடப்பட்டள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கிளிநொச்சியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 16 சிறுவர்களை தொடர்ச்சியாக விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கியுள்ளதாக பாடசாலை அதிபர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோரால் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இதனையடுத்து, கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த குறித்த சந்தேக நபர் தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (13) கிளிநொச்சி குற்றத்தடுப்பு காவல்துறையினர் சந்தேக நபரை கிளிநொச்சியில் வைத்து கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் படி, 16 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேகநபரான விளையாட்டு பயிற்றுநர் இன்று (14) நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
