யாழில் பாடசாலை இல்ல அலங்கரிப்பு விவகாரம்: காவல்துறையினருக்கு அழைப்பாணை
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் இல்ல அலங்காரங்களில் மாணவர்களின் வெளிப்பாடுகள் தொடர்பாக காவல்துறையினர் மாணவர்களையும் ஆசிரியர்களையும் விசாரணைக்குட்படுத்திய சம்பவம் தொடா்பில் விளக்கமளிக்குமாறு தெல்லிப்பழை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
காவல் நிலைய பொறுப்பதிகாரியை நாளை( 5)பிற்பகல் 2.30 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்கும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழு
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அச்சுறுத்துவதும் விசாரணைக்கு உட்படுத்துவதும் மனித உரிமை மீறல் எனச் சுட்டிக் காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், காவல்துறையினரின் இத்தகைய செயற்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், குறித்த முறைப்பாட்டிற்கமைய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் காவல்துறையினரை விசாரணைக்கு அழைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |