போதைப்பொருளை பொதியிட்ட விளையாட்டு ஆசிரியர் கைது
Sri Lanka Police Investigation
Crime
Drugs
Teachers
Arrest
By Sumithiran
பாடசாலையொன்றின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 'ஐஸ்' போதைப்பொருளை பொதி செய்ததாக தெரிவித்து பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக செவனகல காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் தனமல்வில, உவகுடாஓயாவில் உள்ள சமகிபுர பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை ஆவார். 28 வயதான இவர், செவனகல பகுதியில் உள்ள பாடசாலையில் விளையாட்டு ஆசிரியராக பணியாற்றுக்கின்றார்.
மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்றாரா..!
அவருடன் இருந்தவர்களில் ஒருவர் போதைப்பொருள் கடத்தல்காரர் என தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த ஆசிரியர் போதைப்பொருட்களை பாடசாலை மாணவர்களுக்கு விற்றாரா என்பது குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |