காவல்துறையினரை அச்சுறுத்தி நாடாளுமன்றத்திற்குள் சந்தேகத்திற்குரிய பொதியை எடுத்துச் சென்ற எதிரணி!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், காவல்துறை அதிகாரிகளை அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறைமா அதிபரிடம் முறையிடவுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தடைகளை ஏற்படுத்தி சந்தேகத்திற்குரிய பொதி ஒன்றை நாடாளுமன்றத்திற்குள் எடுத்து வந்தமை தொடர்பில் காவல்துறைமா அதிபரிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளில் வெளியாகும் தகவல்களுக்கு அமைய பொருத்தமான நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த முடிவை அவைக்கு அறிவிப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு நேற்று பொதி ஒன்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
அதனை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் கோரியும், அதனை மீறி அவர்கள் எடுத்துச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று காலை ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட விவாதத்தின் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
