சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க தமிழ் தேசிய மக்கள் இயக்கம் அழைப்பு
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை ஈழத் தமிழர்களின் கரிநாளாக பிரகடனம் செய்வது தொடர்பாக அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் தமிழ் தேசிய மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் இலங்கை 75வது சுதந்திர தினமான 04/02/2024 ஆம் நாளை ஈழத் தமிழர்களின் கரிநாள் அனுஷ்டிப்பு நாளாக தமிழ் தேசிய மக்கள் இயக்கம் ஆகிய நாம் பிரகடனம் செய்வதை முன்னிட்டும்.
பௌத்த சிங்கள பேரினவாத அரசு
தொடர்ந்து தமிழ் தேசிய அரசியல் அரங்கில் அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் தங்கள் அடுத்த நகர்வை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற தமிழ் தேசிய மக்கள்" இயக்கத்தின் வலியுறுத்தல்,
தற்போது வரை இலங்கை பௌத்த சிங்கள பேரினவாத அரசு தொடர்ந்து தமிழ் தேசிய நிலப்பரப்பில் முன்னெடுத்துச் செல்லும்இனப் படுகொலைகளை இனங்காட்டலும்
இன்னும் பல தமிழ் தேசிய அரசியல் சார்ந்த அதிரடி நடவடிக்கைகள் தொடர்பான விஷேட ஊடகவியலாளர் சந்திப்பினை தமிழ் தேசிய மக்கள் இயக்கம். புத்தளம் மாவட்டத்தில் நடாத்த உள்ளது என்பதையிட்டு அனைத்து ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களையும்
அன்புரிமையுடன் அழைப்பு
குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தவறாது கலந்து கொண்டு ஈழத் தமிழர்களின் அரசியல் ரீதியான ஜனநாயக போராட்டத்தின் நகர்வுகளை பதிவு செய்து ஊடகவியலாளர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் தொடர்பில் கலந்துரையாடி- ஒடுக்கப்படும் ஊடக சுதந்திரத்தை உயிர்ப்பிக்கும் பணியில் இணைந்து சிறப்பிக்கும் படிக்கு அனைத்து ஊடக நண்பர்களையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலானது எதிர்வரும் 28 ஆம் திகதி தமிழ் தேசிய மக்கள் இயக்கம் தலைமை காரியாலயத்தில் (புத்தளம்) முற்பகல் 10:00 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |