கொழும்பு - பிலியந்தலை வீதி விபத்தில் ஒருவர் பலி - கைதான பேருந்து சாரதி
Sri Lanka Police Investigation
Accident
Death
By Dharu
பிலியந்தலை-கொழும்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து பேலியகொட பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் யக்கலமுல்ல-பொல்பாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 33 வயதுடைய திருமணமான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தனியார் பேருந்துடன் பலியானவர் பயணித்த உந்துருளி மோதியதில் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சாரதி கைது

சம்பவத்தின் போது பலத்த காயமடைந்த உந்துருளி சாரதி கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி