மர்மக்கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட விமானப்படை வீரர் தொடர்பில் துலங்கிய மர்மம்!

Sri Lanka Police Batticaloa Sri Lanka Sri Lanka Police Investigation Sri Lanka Air Force
By Kalaimathy Jul 29, 2022 10:54 AM GMT
Report

விமானப்படை வீரர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று தாக்கியுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் விமானப்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.

நேற்றைய தினம் காலை விமானப்படையின் கோப்ரலான பீ. ரத்னசூரிய மரம் ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதையடுத்து பிரதேசவாசிகள் அது தொடர்பில் வாழைச்சேனை காவல்துறையினருக்கு அறிவித்திருந்தனர்.

அதயைடுத்து காவல்துறையினர், விமானப்படை கோப்ரலை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். அவர் கட்டப்பட்ட மரத்தில் “ முரட்டு அரசியலுக்கு உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகிறார்கள்” என்று தமிழிலில் எழுப்பட்ட பதாகை ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பாக வாழைச்சேனை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். அதன் போது விடுமுறை முடிந்து திரும்பிக்கொண்டிருந்த தன்னை வான் ஒன்றில் வந்தவர்கள் கடத்திச் சென்று, கை, கால்களை கட்டி, மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாக ரத்னசூரிய தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவர் கூறியவை முன்னுக்கு பின் முரணாக இருந்ததன் காரணமாக தமிழ் மொழியில் எழுப்பட்டிருந்த வாசகம் தொடர்பில் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

தீவிர விசாரணையையடுத்து வெளியான உண்மை

மர்மக்கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட விமானப்படை வீரர் தொடர்பில் துலங்கிய மர்மம்! | Sri Lanka Air Force Social Media Police Batticalo

அதன் போது தமிழ் மொழி தொடர்பான போதிய தெளிவில்லாத ஒருவர் எழுதி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணையை ஆரம்பித்ததையடுத்து, விமானப்படை வீரர் தானே இதனை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினரிடம் உண்மையான விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், 

இணையத்தள சூதாட்டத்திற்கு அடிமையானதால், முகாமில் உள்ள ஏனைய படையினரிடம் பணத்தை பெற்றுக்கொண்டேன். பணத்தை திரும்ப செலுத்த முடியாததால், முதலில் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தேன்.

காவல்துறையினரால் கைது

மர்மக்கும்பலால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட விமானப்படை வீரர் தொடர்பில் துலங்கிய மர்மம்! | Sri Lanka Air Force Social Media Police Batticalo

எனினும் நான் தற்கொலை செய்துகொண்டால் விமானப்படையிடம் இருந்து எனது மனைவிக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகள் கிடைக்காது. இதன் காரணமாகவே இந்த திட்டத்தை செயற்படுத்தினேன் எனக் கூறியுள்ளார்.

விமானப்படை கோப்ரலை வாழைச்சேனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் நாளைய தினம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவத்துடன் விமானப்படைக்கோ, வேறு தரப்பினருக்கோ தொடர்பில்லை. முழு செயலும் கோப்ரலால், அவரது விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மூலம் விமானப்படையின் நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்காக கோப்ரலுக்கு எதிராக விமானப்படையின் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் காவல்துறையினர் அவருக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Gallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011