இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நாட்டில் பெரும்பாலான நகரங்களில் இன்று புதன்கிழமை (05) நாள் முழுவதும் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் 1 மணி முதல் 2 மணி வரை காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்று காணப்படும்.
காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை
எல்லை கடந்து வரும் மாசுபட்ட காற்று சுற்றோட்டத்தினால் நாடு முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் சில நாட்களுக்கு அதிகரிக்கலாம்.
அதன்படி, காற்றின் தரக்குறியீடு 85 மற்றும் 128க்கு இடையில் பதிவாகும் என நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்றின் தரம் குறைவதால், முகக்கவசம் அணிவதோடு, உடல்நலக் பிரச்சினைகள் உள்ள நபர்கள் குறிப்பாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |