கட்டுநாயக்காவில் திடீரென இரத்து செய்யப்பட்ட சிறி லங்கா எயார் லைன்ஸ் : நூற்றுக்கணக்கான பயணிகள் அவதி
நேபாளம் மற்றும் மும்பைக்கு செல்லவிருந்த சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானங்கள் இரண்டின் சேவை திடீரென இரத்து செய்யப்பட்டதனால் அந்த விமானங்களில் பயணிக்கவிருந்த பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றது.
நேபாளம் நோக்கிப் புறப்படவிருந்த விமானம்
இதன்படி இன்று காலை 200 பயணிகளுடன் நேபாள தலைநகர் காத்மண்டு நோக்கிப் புறப்படவிருந்த சிறிலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விமானம் பல மணி நேரம் தாமதமான நிலையில், பின்னர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விமானசேவை இரத்து செய்யப்பட்டது.
அதேபோன்று மும்பைக்கு செல்லவிருந்த மற்றுமொரு விமானமும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரத்து செய்யப்பட்டது.
பயணிகள் ஹோட்டல்களுக்கு
இந்த விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதை அடுத்து அவற்றில் பயணிக்கவிருந்த பயணிகள் ஹோட்டல்களுக்கு அழைத்து செல்லப்படவுள்ளதாக சிறி லங்கன் விமான சேவை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.