எட்டப்பட்ட உடன்பாடு : சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு மீண்டும் நிதியுதவி

International Monetary Fund IMF Sri Lanka Economy of Sri Lanka
By Sathangani Oct 05, 2026 04:20 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணியாளர் குழுவுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை முன்னெடுக்கும் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் 7 ஆவது மதிப்பாய்வை நிறைவு செய்வதற்காக இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த உடன்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஒப்புதல் அளித்த பின்னர், இலங்கைக்கு சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்படவுள்ள பெருமளவிலான வரிகள்..! மக்களுக்கு அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

குறைக்கப்படவுள்ள பெருமளவிலான வரிகள்..! மக்களுக்கு அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

 2.7 பில்லியன் டொலர்கள்

இதன் மூலம் இந்தத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இதுவரை கிடைத்த மொத்த நிதியுதவி சுமார் 2.7 பில்லியன் டொலர்களாக உயர்வடையும்.

எட்டப்பட்ட உடன்பாடு : சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு மீண்டும் நிதியுதவி | Sri Lanka And Imf Reach Staff Level Agreement

எனினும், நிறைவேற்று சபையின் இறுதி ஒப்புதலுக்கு முன்னர், 2027 பாதீட்டு அளவுருக்களுக்கு அமைவாக அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் மற்றும் நிதி உத்தரவாத மதிப்பாய்வை பூர்த்தி செய்தல் என்பன அவசியமென சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது.

தொடர்ச்சியான பொருளாதார அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் இலங்கை பொருளாதாரம் கணிசமான மீள்தன்மையைக் காட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக்குழுத் தலைவர் இவான் பபர்ஜியோர்ஜியோ சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்முன்னே தூக்கி வீசப்பட்டது..! தடம் புரண்ட கொழும்பு நோக்கி சென்ற தொடருந்து

கண்முன்னே தூக்கி வீசப்பட்டது..! தடம் புரண்ட கொழும்பு நோக்கி சென்ற தொடருந்து

 

பொருளாதார வளர்ச்சி

இதன்படி, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீத வளர்ச்சியடைந்துள்ளதுடன், ஓகஸ்ட் மாத முடிவில் நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.9 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

எட்டப்பட்ட உடன்பாடு : சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு மீண்டும் நிதியுதவி | Sri Lanka And Imf Reach Staff Level Agreement

மேலும், செப்டெம்பரில் பணவீக்கம் 8 சதவீதமாக நிலவியுள்ளதுடன் கடன் மறுசீரமைப்புப் பணிகளும் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. இருப்பினும், மத்திய கிழக்கு யுத்தத்தின் காலம் மற்றும் தீவிரத்தன்மை, உலகளாவிய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் எல் நினோ காலநிலைத் தாக்கம் காரணமாக இலங்கை பொருளாதாரத்திற்கு தொடர்ந்தும் ஆபத்துகள் நிலவுவதாக நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

இதனால் உலக சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உள்நாட்டு எரிபொருள் விலைகளை சீரமைத்தல், குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலக்கு வைக்கப்பட்ட நிவாரணங்களை வழங்குதல், மத்திய கால வருமான உத்திகளை தயாரித்தல், விநியோக நெகிழ்வுத்தன்மை மற்றும் ஊழல் எதிர்ப்புச் சட்டக் கட்டமைப்பைப் பாதுகாத்தல் போன்ற பரிந்துரைகளையும் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022