சற்றுமுன்னர் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட ஞானசார தேரர்!

Galagoda Aththe Gnanasara Thero Sandya Eknelygoda Law and Order
By Sathangani Oct 05, 2026 04:26 AM GMT
Report

புதிய இணைப்பு

பிடியாணை உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சற்றுமுன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றிற்கு அமைவாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஞானசார தேரருக்கு எதிராக அண்மையில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த பிடியாணை தொடர்பில் தேரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காகவே சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் இவ்வாறு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.  

முதலாம் இணைப்பு

இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள ஞானசார தேரர்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (5) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட அவரை, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நேற்று (4) உத்தரவு பிறப்பித்தார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு 2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கப்ராலுக்கு எதிரான கிரேக்க பிணைமுறி சட்டப்போரில் முக்கிய தீர்ப்பு இன்று

கப்ராலுக்கு எதிரான கிரேக்க பிணைமுறி சட்டப்போரில் முக்கிய தீர்ப்பு இன்று

ஜனாதிபதி பொதுமன்னிப்பு

இதன்போது, நீதிமன்றத்தின் அனுமதியின்றி உரையாற்றியமை மற்றும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் அப்போதைய ஹோமாகம நீதவானால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சற்றுமுன்னர் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட ஞானசார தேரர்! | Gnanasara Thero To Be Produced Before Court Today

இந்த முறைப்பாட்டை விசாரித்த அப்போதைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான நீதியரசர்கள் குழாம், 2018 ஆம் ஆண்டு மே 24 ஆம் திகதியன்று தேரரை குற்றவாளியாகக் கண்டு, 6 வருடங்களில் அனுபவித்து முடிக்கும் வகையில் 19 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது.

இருப்பினும், 2019 ஆம் ஆண்டு மே 23 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுவித்தார்.

கண்முன்னே தூக்கி வீசப்பட்டது..! தடம் புரண்ட கொழும்பு நோக்கி சென்ற தொடருந்து

கண்முன்னே தூக்கி வீசப்பட்டது..! தடம் புரண்ட கொழும்பு நோக்கி சென்ற தொடருந்து

சந்தியா எக்னெலிகொட தாக்கல் செய்த மனு

இதற்கு எதிராக பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குறித்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்துக்கு முரணானது என அண்மையில் தீர்ப்பளித்தது.

சற்றுமுன்னர் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட ஞானசார தேரர்! | Gnanasara Thero To Be Produced Before Court Today

பொதுமன்னிப்பு இரத்து செய்யப்பட்ட போதிலும் தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகததால், சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் அவரைக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையைப் பிறப்பித்ததுடன், அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்தது.

இந்தநிலையில் குறித்த பிடியாணைக்கு அமைய, கடந்த 3 ஆம் திகதி இரவு களுத்துறை, தீனியாவல பிரதேசத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தியாக தீபத்தின் சிலை விவகாரம்! நால்வருக்கு காவல்துறையினர் அழைப்பாணை

தியாக தீபத்தின் சிலை விவகாரம்! நால்வருக்கு காவல்துறையினர் அழைப்பாணை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026