நாட்டு மக்களுக்கு கூட்டமைப்பு விடுத்துள்ள அறைகூவல்

TNA M. A. Sumanthiran Sri Lanka Anti-Govt Protest
By Vanan Jul 28, 2022 11:32 PM GMT
Report

ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வதில் இவ்வளவு கவனம் செலுத்துகின்ற காவல்துறையினர் நாட்டிலே நடைபெறுகிற பலவிதமான அத்துமீறல்கள், கொலைகள், கொள்ளைகள், அதை விட நாட்டின் சொத்துக்களை சூறையாடியவர்கள் என்பவர்களை கண்டுகொள்வதில்லை.

இவ்வாறானவர்களை நாட்டு மக்கள் அப்புறப்படுத்தியிருந்தாலும் காவல்துறையினராலோ, நிர்வாகத்தினராலோ இப்போதுவரை அவர்களை கைது செய்ய முடியவில்லை.

ஆகவே மிகவும் நேர்த்தியாக, வரவேற்கத்தக்க விதத்திலே ஒரு பாரிய புரட்சியை ஏற்படுத்தி நாட்டு மக்கள் விரும்பிய மாற்றத்தை கொண்டு வந்தவர்களை இன்று பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்களை கைது செய்ய முனைவது மிகவும் மோசமான ஒரு செயற்பாடு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியிலுள்ள தனது அலுவலகத்தில் நேற்று(28) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,


“நாட்டில் இன்று பொதுமக்கள் மீது மோசமான அடக்குமுறைகள் அரசாங்கத்தினாலே பிரயோகிக்கப்படுகின்றன. ஆர்ப்பாட்டமொன்று 3,4 மாதங்களாக வன்முறையற்ற ரீதியில் நடைபெற்று மிகப்பெரிய அரசியல் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்களை பார்க்கின்றபோது உலகத்திலே இல்லாதளவிற்கு மிகவும் நேர்த்தியாக, வன்முறை பிரயோகிக்காமல் இந்த நாட்டை சூறையாடிய ராஜபக்ச குடும்பத்தினரை முற்றுமுழுதாக அப்புறப்படுத்துவதிலே இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வெற்றியடைந்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாக்க முன்வருவதற்கு பலர் தயக்கம்

நாட்டு மக்களுக்கு கூட்டமைப்பு விடுத்துள்ள அறைகூவல் | Sri Lanka Anti Govt Protest Tna Sumanthiran Suppor

இந்த ஆர்ப்பாட்டத்தை செய்தபோது இவர்களுக்கு உறுதுணையாக நாட்டில் பல பாகங்களிலிருந்தும் மக்கள் திரண்டுவந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

விசேடமாக தலைநகரில் நடுத்தரவர்க்கத்தினர் அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டனர். ஆனால் இன்றைக்கு அதே ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். அவர்களை பாதுகாக்க முன்வருவதற்கு பலர் தயங்குகிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பாக நேற்றுமுன்தினம்(27) நாடாளுமன்றத்தில் அரசு தரப்பிலே உரையாற்றிய அனைவரும் கூறிய ஒரே விடயம் “அங்கிருந்து அமைதியான முறையில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வந்த நிலையில் பிறகு அண்மையிலே வந்தவர்கள் சிலர் அதனை கைப்பற்றிவிட்டார்கள். அவர்களை தான் நாம் கைது செய்துள்ளோம்” என்றெல்லாம் சொல்கின்றார்கள்.

கைது செய்வதில் மும்முரம்

நாட்டு மக்களுக்கு கூட்டமைப்பு விடுத்துள்ள அறைகூவல் | Sri Lanka Anti Govt Protest Tna Sumanthiran Suppor

உண்மையிலேயெ ஆரம்ப நாட்களிலிருந்து நேர்த்தியாக நடத்தியவர்களை அடையாளங்கண்டு அவர்களை கைது செய்வதில் மும்முரமாக உள்ளனர்.

இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு நாங்கள் ஒரு அழைப்பை விடுக்கிறோம். உங்கள் சார்பாக இந்த போராட்டத்தை நடத்தியவர்கள், நாட்டை சூறையாடியவர்களை அப்புறப்படுத்தியவர்கள் அடக்குமுறைக்கு உட்படுவதை நீங்கள்தான் தடுக்க வேண்டும்.

எங்கள் சார்பாக எங்கள் நாட்டின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக இந்தக் கொள்ளை கும்பலை அடித்து விரட்டிய இந்த ஆர்ப்பட்டக்காரர்களை பாதுகாக்கும் பொறுப்பு இப்பொழுது எங்கள் ஒவ்வொருவரது கையிலும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Melbourne, Australia, Blackburn, Australia

06 Jul, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி