சிறிலங்கா இராணுவத்தினருக்கு ரணில் விடுத்துள்ள அதிரடி உத்தரவு!
Sri Lanka
By pavan
நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை அழைக்குமாறு சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினத்திற்கான (22) நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.
நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம்
பொது அமைதியை பேணுவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
