இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் - மனித உரிமைகள் ஆணைக்குழு!
Sri Lanka Army
Human Rights Commission Of Sri Lanka
Government Of Sri Lanka
By Pakirathan
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தண்டனை வழங்காமை மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
சர்வதேச உடன்படிக்கையின் ஏற்பாடுகளான சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான மீளாய்வுக் கூட்டத்தில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் மீதான தலையீடுகள் தொடர்பிலும் மனித உரிமைகள் மீளாய்வுக் குழு தனது கவலையை வெளியிட்டுள்ளது.
அதேசமயம், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 92 சதவீதமான தனியார் காணிகள் முறையாக உரிமையாளர்களுக்கு விடுவிக்கப்பட்டமைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தனது பாராட்டினையும் தெரிவித்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்