சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ள பொதுமன்னிப்பு !
Sri Lanka Army
Colombo
By Sumithiran
எவ்வித அனுமதியும் பெறப்படாமல் கடமைக்கு சமுகமளிக்காமல் உள்ள சிறிலங்கா இராணுவ வீரர்களுக்கு ஏப்ரல் 20 முதல் மே 20 வரை (2024) ஒரு மாத கால பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.
எனவே பணிக்கு சமுகமளிக்காத அனைவரும் அவர்கள் அந்தந்த சேவைகளில் இருந்து இந்தக்காலப்பகுதியில் உத்தியோகபூர்வ பணிநீக்கம் பெற முடியும்.
பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கு அமைய
பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கு அமைய இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த பொது மன்னிப்பு ஏப்ரல் 02, 2024 க்கு முன்னர் விடுப்பு இல்லாமல் (AWOL) கடமைக்கு சமுகமளிக்காத அனைத்து அதிகாரிகளுக்கும் / பிற பதவிகளுக்கும் பொருந்தும்.
இறுதித் திகதி நீடிக்கப்படமாட்டாது
பொது மன்னிப்பின் இறுதித் திகதி எந்த சந்தர்ப்பத்திலும் நீடிக்கப்படமாட்டாது என சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்