பெற்ற தாயை கொன்ற சிறிலங்கா இராணுவ சிப்பாய் கைது
Sri Lanka Army
Sri Lanka Police
Attempted Murder
By Sumithiran
தன்னை பெற்ற தாயை கொலை செய்த சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாயை எட்டு வருடங்களின் பின்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கெபிதிகொல்லாவ பகுதியில் கடந்த ஜூன் 5, 2015 அன்று, 50 வயது பெண் அவரது வீட்டில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இராணுவ சிப்பாய் கைது
இந்த விசாரணையில் பெற்ற தாயை அவரது மகனான இராணுவ சிப்பாயே கொலை செய்தமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து கட்டுநாயக்க இராணுவ முகாமில் பணியாற்றிய சந்தேகநபரை விசேட காவல்துறை குழு கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்